மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ,500 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படிருந்த நிலையில் தற்போது 5 ஆயிரம் கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post