கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,000 கன அடியாக குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி அளவிற்கு நீர்வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8000 கன அடியாக குறைந்துள்ளது.
காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 8,000 கன நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களிலிருந்து பாசனத்திற்காக, வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.