நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்றிரவு நிலவரப்படி கபினியில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 8 ஆயிரத்து 33 கனஅடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளன. இது அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 19 ஆயிரத்து 33 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Discussion about this post