கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் உழவுப்பணிகளை தொடங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் ஜீவநதியான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது கே.ஆர்.பி அணை. இந்த ஆண்டுக்கான முதல் போக சாகுபடிக்காக, கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல், அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன்படி அணையின் வலது மற்றும் இடது கால்வாய்களில், தலா 50 கன அடி வீதம், 100 கன அடி நீர் நாள்தோறும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்காக தொடர்ந்து 120 நாட்கள் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில், களை எடுத்தல், ஏர் உழுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட உழவு பணிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post