கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம், நெல், வாழை, தென்னை ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன. ஆழியாறு அணையில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், இந்தப் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையிலிருந்து நீர் திறந்து விட உத்தரவிட்டார். அதன்படி, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி நீரை வரவேற்றனர். இதன்மூலம் ஆனைமலைப் பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசனம் பெறும்.
Discussion about this post