முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப் பெரியார் அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மே, ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, 142 அடியை எட்டியது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு முற்றிலும் இல்லாததால், அணையின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 118. 65 அடியாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.