காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதையடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஜூலை 17 ம் தேதி கே.ஆர்.எஸ் அணையில் இருந்து, விநாடிக்கு 355 கனஅடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 855 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தொடர்ந்து இரண்டு ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post