மேட்டூர் அருகே காவேரிபுரம் பகுதியை சேர்ந்த இரு கல்லூரி மாணவர்கள், தண்ணீரில் மிதந்து செல்லும் மிதிவண்டியை தயாரித்துள்ளனர். தமிழ்குமரன், குணசேகரன் ஆகிய இரு மாணவர்கள், 6 அடி நீளம் கொண்ட பி.வி.சி பைப் மூலமாக தண்ணீரில் மிதக்கும் மிதிவண்டியை சுமார் 2 ஆயிரம் மதிப்பீட்டில் தயாரித்துள்ளனர். இதன் மூலமாக தண்ணீரில் எளிதாக பயணிக்க முடியும். பரிசலில் குறித்த நேரத்திற்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் இந்த புதிய வாகனம் அப்பகுதி மக்களுக்கு உதவும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post