தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று பூண்டி நீர்தேக்கம் வந்தடைந்தது.
சென்னை மக்களின் தேவைக்காக, அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சில தினங்களுக்கு முன் கண்டலேறு அணையிலிருந்து 1,750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2000 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்ட தண்ணீர்,தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிலிருந்து பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது. பூண்டி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3,241 மில்லியன் கனஅடியில், 157 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இன்று முதல் படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post