கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் எடியூரப்பா, புகார்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரும்புபவர்கள் 7 நாட்கள் அரசு முகாம்களிலும், 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்த அவர், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post