புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாகச் சென்னை விமான நிலையத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐதராபாத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்துக் கொடுத்து அவரை வரவேற்றனர்.
Discussion about this post