விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே, முதியவர் ஒருவர் நடந்து செல்லும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூண்டி கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர், அங்குள்ள தனியார் விதைப்பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். பணியின் இடைவேளையில், நடந்து செல்லும்போது, திடீரென மயங்கி கிழே விழுந்துள்ளார். இதை கண்டு ஒடிவந்த சக ஊழியர்கள், அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Discussion about this post