மகர விளக்கு பூஜை நடைபெற இருப்பதை முன்னிட்டு பிரசித்திபெற்ற சபரி மலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது..
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 27-ம் தேதி அன்று மண்டல பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இரவு நடை மூடப்பட்டது. இந்நிலையில், மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் சபரிமலை முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, எதிர்வரும் ஜனவரி 15-ம் தேதி அன்று நடைபெறும் மகர விளக்கு பூஜையில், பந்தளம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும். மேலும், சபரிமலைக்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரள அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Discussion about this post