இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சவை பிரதமராக, அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து ராஜபக்சவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சி தோல்வியடைந்ததால், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ஜனவரியில் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் சிறிசேன அறிவித்தார்.
இதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகளையும் முடக்கியது. இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவும், ராஜபக்சவும், பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர். இந்நிலையில்,வரும் 12ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், அன்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post