தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி, நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவி பேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post