ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை 7 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 73 புள்ளி 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் 8வது கட்டமாக 331 சார் பஞ்சாயத்து மற்றும் 2 ஆயிரத்து 7 பஞ்சாயத்து இடங்களுக்கான வாக்குபதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக 2 ஆயிரத்து 633 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 361 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Discussion about this post