திமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி தான்: ராமதாஸ்

திமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து டாக்டா ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சிறந்த மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஜேக்டோ ஜியோ அமைப்பினரின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் உறுதியளித்தார்.

Exit mobile version