தயாநிதி மாறனை நம்ப வாக்காளர்கள் தயாராக இல்லை: சாம் பால் விமர்சனம்

மக்கள் பணி செய்யாத திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை நம்புவதற்கு மத்திய சென்னை வாக்காளர்கள் தயாராக இல்லை என அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம் பால் விமர்சித்துள்ளார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா வாக்கு சேகரித்தார். சென்னை அமைந்தகரை, டிபி ( TP)சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாம் பால், தயாநிதி மாறன் 2009-ல் போட்டியிட்டு வென்றும் தொகுதி மக்களை நேரில் வந்து சந்திக்காத கோபம் இன்றும் மத்திய சென்னை மக்களிடம் இருப்பதாக கூறினார்.

Exit mobile version