தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மொத்தம் 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலில், மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3 ஆயிரத்து 585 பேரும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும் களத்தில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post