46 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு என புகார்:சத்யபிரதா சாஹூ

46 வாக்குப்பதிவு மையங்களில் தவறு நடந்து இருப்பது தெரிய வந்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனைகள் நடந்ததாக புகார் வந்ததாக அவர் கூறினார். 46 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என புகார் வந்ததாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், உத்தரவு வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 156 கோடியில் 144 கோடி திருப்பி அளிக்கப்பட்டு வருவதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Exit mobile version