உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் நாளை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு தேவையான வாக்கு இயந்திரங்களை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் கோரியது. அதனையடுத்து தமிழகத்திற்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் வாக்கு இயந்திரங்களில் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நாளை வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version