வாக்களிப்பதன் அவசியம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணி நடைபெற்றது.
பின்னர் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் கருவி ஆகியவைகள் செயல்முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மணிராஜ் கலந்துகொண்டு செயல் முறை விளக்கமளித்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவியர் மாதிரி வாக்குப்பதிவு செய்தனர். இதில் பேசிய ஆட்சியர் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள அறிவுரை வழங்கினார்.
Discussion about this post