முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது தேர்தலுக்காக இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொகுதிகுட்பட்ட 255 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விதமாக பாரத் மின்னணு நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. இந்த பணிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
Discussion about this post