விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளில், பொதுமக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் இந்த இடைத்தேர்தலை, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்க வேண்டும் என்றும், மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் அதிமுக-வை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர, இரு தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Discussion about this post