வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், மாணவர்களை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அறிந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post