கஜா புயலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் நேரில் பார்வையிட்டார்.
கஜா புயலால் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள கடலோர பகுதிகளான 19 மீனவ கிராமங்கள் உள்ளிட்ட 170 இடங்களை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையம், திருமண மண்டபங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 140 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுமக்களை மீட்க ஆயிரத்து 145 நாட்டு படகுகள், 33 பைபர் படகுகள், நீர் உறுஞ்சும் இயந்திரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுப்ரமணியன் கூறினார்.
Discussion about this post