மலையாள வருடப்பிறப்பான விஷூ பண்டிகையையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
மேடம் மாதத்தின் முதல் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டாடும் மலையாளிகளின் முக்கிய பண்டிகை விஷூ. இந்த நாளில் கேரள மாநில மக்கள் புத்தாடைகள் அணிந்து, வெள்ளரிக்காய், பலாப்பழம் போன்ற மூவகை கணிகள் மற்றும் தங்க நாணயம் உள்ளிட்டவைகளை, கண்ணாடி முன் வைத்து பார்ப்பார்கள். பெரியவர்கள் சிறுவர்களுக்கு பணம், தங்க நகை உள்ளிட்டவையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவிப்பார்கள்.
பண்டிகையையொட்டி சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
Discussion about this post