விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயின்று வருகிறார். தாம் கற்ற கலையில் உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் முன்னிலையில், 302 ஆசனங்களை 6 நிமிடம் 51 விநாடிகளில் செய்து முடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சான்று பெற உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post