விக்ரம் பிரபுவுக்கு எதிர்பாக்காத surprise கொடுத்த விராட் கோலி..

விக்ரம் பிரபுவின் மகனின் பிறந்தநாளுக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கிரிக்கெட் வீரர் விராட் கோலி அனுப்பியுள்ளார்.

கும்கி திரைப்படம் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு முதல் படத்திலேயே தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.தொடர்ந்து இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, சத்ரியன், துப்பாக்கி முனை ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.தற்போது தனா இயக்கத்தில் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று விக்ரம் பிரபுவின் மகன் விராட் பிறந்தாள்.இதனை அறிந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி விக்ரம் பிரபு மற்று அவரின் மகன் விராட்டுக்கு surprise கொடுக்கும் விதமாக வீடியோ மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.இந்த வீடியோவை விக்ரம் பிரபு அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் ’உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது மகன் விராட்டின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.எனது மகன் மிகவும் சந்தோஷப்பட்டான்.மேலும் மேற்கிந்திய தீவு அணியுடன் நடந்த போட்டியில் நீங்கள் வென்றது மகிழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version