இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த புஜாரா, மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து, புஜாரா 58 ரன்களிலும், இளம் வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்தும் ஆட்டமிழந்தனர். இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இந்திய அணி 273 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சை எதிர்த்து விளையாடிய கேப்டன் விராட் கோலி, தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இருந்த துணை கேப்டன் ரகானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்க இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் குவித்தது. இதனையடுத்து வந்த ஜடேஜா, கோலியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.