மேற்கிந்திய தீவுகள் அணியுடனான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகின்றன. இப்போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலி 37 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை கடத்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர் தனது 417-வது இன்னிங்ஸில் இச்சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் பிரையன் லாரா ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின், லாரா ஆகியோர் தனது 453-வது இன்னிங்ஸில் 20 ஆயிரம் ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post