உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை விராட் கோலி வாங்கினாலும், கேப்டன்ஷிப்பில் மட்டும் சொதப்பி வருகிறார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆடும் அணி லெவனை தேர்வு செய்வதிலும், பவுலிங் ரொட்டேட் செய்வதிலும் விராட் கோலிக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறது. அடுத்து வரும் உலக கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் இந்தியாவும் பலராலும் கூறப்பட்ட போதும், விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் மட்டும் யாரும் திருப்தி அடையவில்லை.
அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை இவர் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் இழந்தது. அந்த தொடரில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் தவறாக தான் முடிந்தது. அதே போல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவரது அணி தோல்வியடைந்து வருவது ரசிகர்களை கவலைப்பட செய்துள்ளது.
பெங்களூர் அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதும் இந்த தொடர் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியில் டோனி இடம்பெறும் போது நிச்சயம் கோலிக்கு அது பக்கபலமாக இருக்கும். டோனி கோலியை போல் தலைசிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் (டோனி கேப்டனாக இருக்கும் போது) ஆட்டத்தை தன் வசம் வைத்து கொள்ளுவதில் வல்லவர். விராட் கோலியும் டோனியிடம் ஆலோசனை கேட்பதில் எந்தவித ஈகோவும் காட்டுவதில்லை.
விரைவில் கேப்டன்ஷிப்பில் அசத்துவார் கோலி…
கோலி கேப்டன்ஷிப்பில் சிறு தவறுகளை நிச்சயம் சரிசெய்து கொண்டு இந்த ஐபிஎல் தொடரிலேயே அசத்துவார் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதே போல் உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் கோலியின் பங்கு முக்கியமானதாகும். இந்திய அணியில் கோலிக்கு பிறகு யார் களமிறங்குவார்கள் என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. ராயுடு தற்போது சொதப்பி வருவதால், பண்ட், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. இதில் யாரை தேர்வு செய்ய போகிறார்? எப்படி கேப்டன்ஷிப் எப்படி செய்யப் போகிறார்? என்று ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
Discussion about this post