பரமத்திவேலூர் அருகே, திருப்பதி முனியப்ப சுவாமி கோவிலில் வினோத அசைவ விருந்து திருவிழா நடைபெற்றது. பரமத்திவேலூரை அடுத்த பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில், உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்பசாமி கோவிலில், 60 அடி உயர முனியப்பசாமி, கையில் ஒன்றரை டன் எடையுள்ள 25 அடி நீள கத்தியை ஏந்தியவாறு பிரமாண்டமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில், 23 வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. காலையில், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர், முத்துக்கருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சியில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 219 கிடாக்கள் வெட்டப்பட்டது. இன்றும், காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசைவ அன்னதானமும் வழங்கப்பட்டது.
Discussion about this post