திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகள் முன்கூட்டியே துவங்கிவிட்டன. அரசு வகுத்திருக்கும் விதிமுறைகளின்படி சிலைகள் தயாரிக்கப்படுகின்றதா? என்றும் அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.