விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட காரணம் இதுதான்

இந்தியாவின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் விதமாக, விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் மிகப் பிரமண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆவணி மாத சதுர்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை விநாயகர் மீட்டார் என்பது புராணம். அதே சமயம், மராட்டிய நாட்டின் கலாச்சார விழாவாக சத்ரபதி சிவாஜி அவர்களின் ஆட்சி காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்தாலும், அதன் பிறகு சுதந்திர போராட்ட காலங்களில், இந்து மதத்தின் பால் ஈர்ப்பு கொண்ட தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் தான் 1893 ம் ஆண்டு ”சர்வஜன கனேஷ் உத்சவ்’’ என இவர் ஆரம்பித்துவைத்த அந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்று வரை மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது.

நாம் அனைவரும் முதன்மையாக, சிறப்பாக வழிபடக்கூடிய விநாயகரை.. பிள்ளையார், கணபதி, சித்திபுத்தியான், விகட சங்கரன், தும்பிக்கை ஆழ்வார், சங்கரன், ஐயங்கரன், என்றெல்லாம் மக்களால் இஷ்ட தெய்வமாக அழைக்கப்பட்டு, எந்த சுபகாரியம் ஆக இருந்தாலும் விநாயகரை பிரார்த்தித்த பின்னரே அதை செய்ய ஆரம்பிப்பார்கள். அதன் தொடர்ச்சியாகவே நம்மில் பலரும் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கொண்டுள்ளோம். இந்தோனேசியாவின் கரண்சி நோட்டில் கூட விநாயகர் படம் உள்ளது.

மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தியானது இந்தியாவின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் விதமாக, நாடு முழுவதும் மிகப் பிரமண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Exit mobile version