100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளத்தை தூர்வார முயற்சி செய்த கிராம மக்களின் முடிவிற்கு ஜல்சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாராட்டுகளை தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிளிதான்பட்டரை பகுதியிலுள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தாமரை குளம் பராமரிப்பின்றி குட்டை போல் தேங்கியுள்ளது. இதனை தூர்வார முடிவு செய்த அப்பகுதி மக்கள் கூட்டு முயற்சியாக இரண்டு தினத்தில் 2 லட்சம் வரை நிதி திரட்டி தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பணியை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் பிரசன்னகுமார் பண்டிட் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு துவக்கி வைத்து ஆய்வு செய்தனர். பின்னர் பேசிய அவர்கள், ஊர்மக்களின் இந்த முயற்சியை வரவேற்பதாக தெரிவித்தனர்.