அரியலூர் அருகே இளைஞர்கள் நடத்தி வரும் கிராம நலச்சங்கம் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இருங்களாக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கிராம நலச்சங்கம் ஒன்றை நிறுவியுள்ளனர். இந்த நலச்சங்கம் கிராமத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. கிராம மக்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள், என அனைவராலும் நிதி திரட்டப்பட்டு, கிராம மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நூலகம், மரக்கன்று நடுதல் என எதிர்கால வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இருங்களாக்குறிச்சி கிராம நலச்சங்கம், பொதுமக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
Discussion about this post