`செம்மயா சாப்புட்றோம்.. பயங்கரமா ருசிக்கிறோம்..’ ஆன்லைன் உலகில் பிரவேசிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான டயலாக் தான் இது. யூடியூப்பில் கிராமத்து சமையல் என்ற பதத்தை முன்வைத்து உருவாக்கப்பட்ட `வில்லேஜ் குக்கிங் சேனல்’ பாமர மக்களையும் சென்று சேரும் அளவுக்கு பிரபலம்.
பசி உச்சத்தில் இருக்கும்போது தப்பி தவறி இந்த வீடியோக்களை பார்த்துவிடக்கூடாது என்று டிஸ்க்ளைமர் போடும் அளவுக்கு பசி செல்களை தூண்டிவிடும் ஆக்சிலேட்டர் தான் இது. கடந்த 20008ம் ஆண்டு தொடங்கிய இந்த யூடியூப் சேனல் தற்போது தமிழின் முதல் 1 கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட முன்னணி யூடியூப் சேனலாக உருமாறியிருக்கிறது. லட்சங்களை முதலீடு செய்து வீடியோக்களை பதிவேற்றி வரும் யூடியூப் சேனல்களால் எட்டமுடியாத உயரத்தை அசால்ட்டாக எட்டி தமிழ் யூடியூப் சேனல்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர் இந்த வில்லேஜ் ராஜாக்கள்
Discussion about this post