விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 21ந் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், காவல்துறை சார்பில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் துணை ராணுவத்தினர் 200 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 300 பேரும் பங்கேற்ற அணிவகுப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக, 3 கம்பெனி துணை ராணுவ படையினர் மற்றும் 7 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என ஆயிரம் பேர் இந்த தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post