விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலை ஒரு மணியளவில் நிலவில் தரையிறங்க இருக்கிறது. இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், நிலவில் விக்ரம் லேண்டர் கால் பதிக்க இருக்கும் தருணத்தை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்தார். இதுவரை எந்த நாடும் கால் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகக் களமிறங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வைப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து நேரடியாகக் காண இருக்கிறார்.
Discussion about this post