இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என, லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தொழிலதிபர் விஜய் மல்லையா, 63 வங்கிகளில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனில் தலைமறைவானார். அவரை நாடு கடத்த கோரி, இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு நாடு கடத்த, பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து விஜய் மல்லையா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post