விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயத்தில், வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்து 164 குழந்தைகளுக்கு நாக்கில் தங்க ஊசியால் ஓம் என்ற எழுத்து எழுத்தப்பட்டும், நெல்மணி, அரிசியில் குழந்தைகளின் கைகளால் எழுத்துக்களை எழுத வைத்தும் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கப்பட்டது. இதனை செய்வதால் குழந்தைகள் கல்வியில் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம். சரஸ்வதி ஆலயம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Discussion about this post