மெக்சிகோவில் சேதமடைந்த சாலையை நிலவாகச் சித்தரித்து வீடியோ வெளியீடு

மோசமான சாலையைச் சுட்டிக்காட்ட நிலவில் நடப்பது போன்று பெங்களூரில் வெளியிடப்பட்ட வீடியோ போன்று மெக்சிகோவிலும் ஒரு வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.

பாதல் நஞ்சுண்டசாமி என்ற பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குண்டும் குழியுமாக இருந்த சாலையை நிலவு போன்று சித்தரித்து வீடியோ வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து அந்தச் சாலை சீரமைக்கப்பட்டது. இந்தச் செய்தி உலக அளவில் வைரலானதையடுத்து மெக்சிகோவில் பொவேடா செலெஸ்டே என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே நிலவில் நடப்பது போன்று வீடியோ வெளியிட்ட பாதல் நஞ்சுண்டசாமியைத் தொடர்புகொண்டனர். இதேபோன்று தாங்களும் வீடியோ எடுக்க விரும்புவதால் அதற்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளனர். இதை அனுமதித்த பாதல், மெக்சிகோவில் மறு சித்தரிப்பு செய்யப்பட்ட வீடியோவின் காட்சிகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version