சுதந்திர போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில் 1920ஆம் ஆண்டில், ஆங்கிலேயே எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடியதால் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அதில் இன்னுயிரை நீத்த வீரர்களின் நூற்றாண்டைப்போற்றும் வகையிலும், உயிர்நீத்த 16 வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post