புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புளிசாதம், கடலை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு கடந்த இரண்டு தினங்களாக வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் மடப்பள்ளியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதே, வயிற்றுப்போக்கிற்கு காரணமென குற்றஞ்சாட்டும் அவர்கள், இது குறித்து அறநிலையத்துறையினர் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post