விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை 15 வயது வீராங்கனை வீழ்த்தியது ரசிகர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அமெரிக்காவின் பிரபல வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் சக நாட்டவரான 15 வயதே ஆன கோரி குவாஃபை எதிர் கொண்டார். இதில், 6 க்கு 4, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை கோரி வீழ்த்தினார். 39 வயதான வீனஸ் தன்னை விட 24 வயது இளையவரான கோரியிடம் தோல்வியடைந்துள்ளது ஒட்டு மொத்த டென்னிஸ் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற வீனஸ், அதில் 2 பட்டங்களை கோரி பிறப்பதற்கு முன்பே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக இளம் வயதில் முதல் தர டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள கோரி கடந்த ஆண்டு நடந்த பிரஞ்ச் ஓபன் ஜூனியர் பட்டத்தையும் வென்றுள்ளார் . அதேபோல், முதல் சுற்றிலேயே வீனஸ் தோல்வியடைவது இது 2 வது முறையாகும், 1997 ஆம் ஆண்டு நடந்த தனது அறிமுக போட்டியில் தோற்றிருந்தார். கோரிக்கி பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் வீனஸ் வில்லியம்ஸும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
Discussion about this post