தல பற்றிய இந்த நினைவுகளை மறக்கவே முடியாது :வெங்கட் பிரபு

மங்கத்தா திரைப்படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு 8yearsofmankatha எனக் குறிப்பிட்டு மங்கத்தா திரைப்படத்தின் முதல் நாள் படிப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தல அஜித்தின் 50 வது திரைப்படமாக மங்கத்தா திரைப்படம் 2011ம் ஆண்டு வெளியானது.இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.தல அஜித் நடித்த விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரமானது தல ரசிகர்களிடன் இன்றும் கொண்டாப்படும் ஒன்றாக உள்ளது.

த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி என பல நட்சத்திரங்கள் நடித்த மங்கத்தா திரைப்படமானது வெளியாகி இன்றுடன் 8 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மங்கத்தா திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில்’முதல் நாள் படிப்பிடிப்பு’இந்த காட்சி எது என உங்களுக்கு தெரியும் என கூறி 8yearsofmankatha என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில், தல ரசிகர்களும் 8yearsofmankatha-வை கொண்டாடி வருகின்றனர்.

 

Exit mobile version