அப்துல் கலாம், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாய் மொழியில் கல்வி பயின்றவர்கள் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய் மொழி மிகவும் அவசியம் என்றார். உங்கள் மொழியும் கலாச்சாரமும் ஒன்றினைந்து பயணிக்கக்கூடியது எனத் தெரிவித்தார்.
முதலில் தாய் மொழியில் பயில வேண்டும் என்றும் பிறகு மற்ற மொழியில் பயிலுங்கள் எனக் குறிப்பிட்டார். மறைந்த அப்துல் காலம் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி, பாரத பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆங்கில வழிகளில் படித்து வளர்ந்தவர்கள் அல்ல என்றும் அனைவரும் தாய் மொழி கல்வி கற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post