புயலை எதிர்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
வங்கக் கடலில் மையம் கொண்ட புயல், நாளை மறுதினம் தமிழகம் வழியை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான தயார் நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின்பேரில் இன்று சென்னையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக கூறினார். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும், நீர் இறைப்பு மற்றும் மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post