மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் வேலு தங்கமணியை, சம்மட்டியூரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது கூட்டாளி மணி ஆகிய இருவரும் பட்டா கத்தியால், வெட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ் மற்றும் மணி இருவரும் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். இந்நிலையில் சதீஷின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. மர்ம நபர்கள் வீட்டிற்கு தீ வைத்து சென்றது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post